இதுல கேரள மாநிலம் தான் முன்னிலை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.!
கடந்த 24 மணிநேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் 23 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் 23 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 6 நாட்களில் கொரோனா பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40% ஆக குறைந்துள்ளது என கூறியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 13,387 பேர் பாதிக்கப்பட்டு, 437 பேர் உயிரிழந்துள்ளார்கள் மற்றும் 1,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.
இதையடுத்து மாநிலங்களுக்கு 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன என்றும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கும் நோக்கத்தில் விரைந்து செயல்பட்டு வருகிறோம். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் கேரள மாநிலம் தான் முன்னிலையில் இருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் 395 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 245 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.