திருமணத்திற்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மணமகன் ..!காரணம் இதுதான் ..!

Default Image
  • உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகன் திருமணமண்டபத்திற்கு குதிரையில் சென்றார்.
  • அப்போது அவர் சென்ற வழியில் சிலர் மருத்துவ கல்லூரி வேண்டும் என போராட்டம் நடத்தினர்.
  • இதை தொடர்ந்து மணமகனும் திருமணத்திற்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மஹோட்பா மாவட்டத்தை சார்ந்த ஒரு இளைஞருக்கும் , இளம் பெண்ணுக்கும் திருமண செய்ய இருவீட்டாரும் முடிவு செய்து இருந்தனர்.இவர்களின் திருமணம் கடந்த சிலநாள்களுக்கு முன் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்தின் அன்று மணமகன் குதிரை மூலமாக திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக வந்தார்.அப்போது குதிரையில் மணமகன் திருமண மண்டபத்திற்கு  வந்து கொண்டு இருக்கும்போது ஒரு பெரிய கும்பல் ஒரு இடத்தில் அமர்ந்து உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

உடனே மணமகன் அங்கு போராட்டம் நடத்தியவர்களிடம் விசாரித்த போது இந்த மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி வேண்டும் என போராட்டம் நடத்துவதாக அவர்கள் கூறினர்.இதைத்தொடர்ந்து மணமகன் தனக்கு சற்று நேரத்தில் திருமணம் நடக்க உள்ளது என்று கூட பார்க்காமல் போராட்டம் நடத்தியவர்களுடம் சேர்ந்து மணமகனும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த செய்தி மணமகள் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மணமகன் திருமண மண்டபத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்