“பப்ஜி உட்பட 118 செயலிகளை தடை செய்ததற்கான காரணம் இதுதான்!”- குளோபல் டைம்ஸ் கருத்து

Default Image

பப்ஜி உட்பட 118 சீனா செயலிகளை தடை செய்ததற்கான காரணம் இதுதான் என சீனா ஊடகமான குளோபல் டைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.

இதைதொடர்ந்து, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்தது. அதன்பின், தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் மொத்தம் 224 சீனா தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய அரசு, பப்ஜி உட்பட 118 சீனா செயலிகளை தடை செய்ததற்கான காரணம் இதுதான் என சீனா ஊடகமான குளோபல் டைம்ஸ் , தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதாரம் முடங்கியது காரணமாக ஏற்படக்கூடிய வீழ்ச்சியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த 118 சீன செயலிகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், இது மோடி அரசின் சாதனை மேட்டரும் சந்தர்ப்பவாதத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறதாக தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்