தடுப்பூசிகளை டெல்லி அரசு விரைந்து செலுத்தி விடுவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது தடுப்பூசிகள் இல்லாத காரணத்தால் அங்கு தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக தொடர்ந்து மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறார். தடுப்பூசிகளை டெல்லி அரசு விரைந்து செலுத்தி விடுவதால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஹரியானாவில் ஒரே நாளில் 2 பேருக்கு தடுப்பூசி போட்டு, தடுப்பூசிகளை காலி செய்து விடலாம். ஆனால் மத்திய அரசிடமிருந்து வரும் தடுப்பூசிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் தினந்தோறும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஹரியானாவில் டெல்லியை விட அதிகமான மக்கள்தொகை உள்ளனர். டெல்லியின் மக்கள் தொகை இரண்டு கோடி, எங்கள் மக்கள் தொகை 2.90 கோடி. டெல்லிக்கு 51 லட்சம் தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளன, அதன்படி எங்களுக்கு 74 முதல் 75 லட்சம் டோஸ் கிடைத்திருக்க வேண்டும், ஆனால் எங்களுக்கு 58 லட்சம் டோஸ் மட்டுமே கிடைத்துள்ளது.மத்திய
அரசிடம் உள்ள தடுப்பூசிகளின் அடிப்படையில்தான் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது இந்த விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் செய்து வருகிறார் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஹரியானா அரசும் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…