நாய்க்கு புலிவேஷம் போட்ட விவசாயி.. இதுதான் காரணம்..!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவமோகா மாவட்டத்தை சேர்ந்தவர், ஸ்ரீகாந்த் கவுடா. விவசாயியான இவர், அவரின் தோட்டத்தில் காபி மற்றும் பாக்கு மரங்களை வைத்துள்ளார். இந்நிலையில், அவரின் தோட்டத்தில் குரங்கு தொல்லை நிறைய இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து, குரங்கிடம் இருந்து பயிர்களை காப்பதற்கு அவர் கோவாவில் இருந்து புலி உருவ பொம்மைகளை வாங்கி வைத்துள்ளார். அனால், அது நள்ளிரவில் நிறம் மாறிவிடுவதால் குரங்குகள் மீண்டும் தோட்டத்திற்குள் நுழைந்து பயிர்களை செத்த படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அவர் தான் வளர்க்கும் நாய் மீது புலி போல் சாயம் பூசியுள்ளார். அதன்பின், அவரின் தோட்டத்தில் அந்த நாயை விட்டார். இதனையடுத்து, குரங்கில் அச்சுறுத்தல்கள் குறைந்து விட்டது. இந்த ஐடியாவை மற்ற விவசாயிகளும் பின்பற்ற தொடங்கினார்கள்.