ஹரியானா அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் இதுதான் – பாரத் பயோடெக் நிறுவனம்.!
கோவாக்ஸின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்து கொண்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் என்னவென்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சராக உள்ள அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.அவர் பகிர்ந்த பதிவில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,அம்பாலா கண்டோன்மென்டில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ,என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் கூறியிருந்தார்.
இவர் ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸின் தடுப்பூசிக்கான பரிசோதனையில் பங்கெடுத்து , நவம்பர் 20-ம் தேதி கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினின் முதல் டோஸ் அவரது உடலில் செலுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த பாரத் பயோடெக் நிறுவனம் ,கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனை இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் ,முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 28 நாட்களுக்கு பின்னரே இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் .மேலும் இரண்டாவது டோஸ் கொடுக்கப்பட்ட 14 நாட்களுக்கு பின் தான் தடுப்பூசி கொரோனாவை கட்டுபடுத்துகிறதா என்பதையும் ,அதன் செயல்திறனும் தீர்மானிக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 50% பேருக்கு தடுப்பூசி மருந்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே கொடுக்கப்பட்டதாக பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Covaxin clinical trials are based on a 2-dose schedule, given 28 days apart. The vaccine efficacy will be determined 14 days post the 2nd dose. Covaxin has been designed to be efficacious when subjects receive both doses: Bharat Biotech https://t.co/eT5YybkoLl
— ANI (@ANI) December 5, 2020