2021-22ல் அதிக மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பிய இந்திய நகரம் இது தான்.!
2021-22ஆம் ஆண்டில் ஹைதராபாத், அதிக மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக தகவல்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 2021-22ஆம் ஆண்டில் ஹைதராபாத் நகரத்திலிருந்து அதிகமான மாணவர்கள் படிக்கச்சென்றுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அறிக்கையின்படி, 2.6 லட்சத்திற்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர், அவர்களில் சுமார் 75,000 பேர் இந்தியர்கள் என்று ஓபன் டோர்ஸ் அறிக்கை கூறுகிறது.
இந்திய மாணவர்களில் 30% ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடும் போது ஹைதராபாத், மும்பை மற்றும் புதுடெல்லியை விடஅதிக மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டை விட 2022 இல் 19 சதவீதம் அதிகரித்துள்ளது, ஒட்டுமொத்தமாக, அமெரிக்காவில் உயர்கல்வி பெறும் மொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2020-21ல் 9.14 லட்சத்தில் இருந்து 2021-22ல் 9.48 லட்சமாக உயர்ந்துள்ளது.