தேசிய பங்கு சந்தையின் (NSE) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரை சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டு வந்த போது, இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியாரிடம் பல்வேறு ஆலோசனைப் பெற்று தேசிய பங்கு சந்தையில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், பங்குச்சந்தை குறித்த ரகசிய தகவல்களை சாமியாரிடம் பகிர்ந்து கொண்டதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சாமியார் ஆலோசனைபேரில் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை திட்ட ஆலோசகராக நியமனம் செய்து,அவருக்கு பல முறை ஊதிய உயர்வை சித்ரா வழங்கினார் என செபியால் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதன்காரணமாக, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதம் மற்றும் பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையை செபி விதித்தது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றது. அதன்பின்னர், சித்ராவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனால்,முன்ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா மனு தாக்கல் செய்திருந்தார்.ஆனால்,சித்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சித்ரா ராமகிருஷ்ணா கடந்த மார்ச் 6 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து,தேசிய பங்குசந்தை தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாட்கள் சிபிஐ காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டது. 14 நாட்கள் சிபிஐ கோரிய நிலையில் 7 நாள்கள் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனிடையே,சென்னையில் ஆனந்த் சுப்பிரமணியன் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில்,ஆனந்த் சுப்பிரமணியன் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கோரிய பிணை கோரும் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில்,பிணை வழங்கினால் ஆனந்த் சுப்பிரமணியன் வெளிநாடு தப்பி விடுவார் என்று சிபிஐ வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில்,இவ்வழக்கில் புதிய திருப்பமாக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனை கூறிய இமயமலை யோகி என்பவர் வேறு யாரும் இல்லை,அவர் ஆனந்த் சுப்பிரமணியன்தான் என்றும்,சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அவரே முழு ஆலோசகராக செயல்பட்டுள்ளார் என்றும் அவர்தான் அனைத்து மின்னஞ்சல்களையும் இயக்கியிருக்க வேண்டும் எனவும் சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதன்பின்னர் பேசிய சுப்ரமணியனின் வழக்கறிஞர் அர்ஷ்தீப், “2010-2014 இல் இந்த ஊழல் நடந்ததாகவும், 2013 இல் அவர் நியமிக்கப்பட்டபோது,2013 ஆம் ஆண்டு செபியின் இரண்டு உள் விசாரணைகளிலும் சுப்ரமணியனுக்கு எதிராக எதுவும் கண்டறியப்படவில்லை என்றும்,மேலும் கூறப்படும் குற்ற நடவடிக்கைகளில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஆனால்,ஆனந்த் சுப்பிரமணியனின் ஜாமீன் மனுவை எதிர்த்து,832 ஜிபி டேட்டாவை மீட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்தது.இதனையடுத்து,இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்கும் தனது உத்தரவை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…