அண்மை காலத்தில் இதுதான் முதல்முறை! பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரம் வெளியீடு!

Bihar Census

இந்தியாவில் 1881-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தான் முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பின்னர் 1931-ம் ஆண்டு வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பிறகு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்த முந்தைய தரவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால் அந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஏனென்றால், காங்கிரஸ் அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களில் குழப்பங்கள் உள்ளதாக அதுதொடர்பான வழக்குகளில் மத்திய பாஜக அரசு தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதன் காரணமாக புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசை வலியுறுத்தின. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் யாருக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு என தீர்மானிக்க முடியும் என அரசியல் கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக நீதியை நிறைவேற்றும் வகையில் பீகார் முதலமைச்சர் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என அனுமதித்தது. பாட்னா உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, மத்திய அரசைத் தவிர வேறு எந்த ஒரு அமைப்புக்குமே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த எந்த அதிகாரமும் இல்லை என மத்திய அரசு கூறியிருந்தது.

இதில், சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன. இதனைத்தொடர்ந்து, பீகாரில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பீகாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் விவரத்தை அம்மாநில அரசு வெளியிட்டது. நாட்டிலேயே அண்மை காலங்களில் முதல் முறையாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை பீகார் மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 ஆக உள்ளது. இதில் 3 கோடியே 54 லட்சத்தி 63 ஆயிரத்து 936 பேர், அதாவது 27.13 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதுபோன்று, 4 கோடியே 70 லட்சத்தி 80 ஆயிரத்து 514 பேர், அதாவது 36.01% பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதேபோல், 2 கோடியே 56 லட்சத்து 89 ஆயிரத்து 820 பேர், அதாவது 19.65 சதவிகிதம் பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

மேலும், 21 லட்சத்தி 99 ஆயிரத்து 361 பேர் அதாவது 1.68% பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 கோடியே 2 லட்சத்து 91 ஆயிரத்து 679 பேர் அதாவது மொத்த மக்கள்தொகையில் 15.5% பேர் பொது பிரிவினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பீகார் மாநிலத்தில் பிறப்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் 63% பேர் வசிக்கின்றனர் எனவும் பீகார் அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம் தேர்தல்  நெருங்கி வரும் நிலையில், பீகாரில் நடத்தப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பு முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
dmk mk stalin annamalai
Pakistan for Champions Trophy defeat
Tamilnadu CM MK Stalin
tvk vijay
PM Modi - Delhi opposition leader Atishi
CM STALIN - Boxing