ஒட்டு மொத்த இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஜெகனின் அறிவிப்பு!வரலாற்றில் இது தான் முதல் முறை
ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் இன்று பதவியேற்கின்றனர்
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.தற்போது ஆந்திரா வரலாற்றில் 5 துணை முதல்வர்கள் நியமனம் செய்து ஜெகன்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சாதிக்கு ஒரு துணை முதல்வர் என்று நியமனம் செய்யுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. இது புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், கபூ சமூகத்தினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் ஆனது அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது.மேலும் இந்த 5 துணை முதல்வர்களும் இன்று பதவியேற்கின்றனர்.ஜெகன் அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமனம் செய்துள்ளார்.அவர்களும் இன்று பதவி ஏற்க உள்ளனர்.ஜெகனின் இந்த செயலால் அரசியல் கட்சியினர் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.