நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 33 மக்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த புதன்கிழமை (டிசம்பர் 13) அன்று நாடாளுமன்றத்தில் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இரண்டு பேர் மக்களவையில் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசி கோஷமிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நாடாளுமன்ற பாதுகாப்பு கேள்விக்குறியானது.
அதாவது, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. அப்போது புதன்கிழமை (டிசம்பர் 13) அன்று 22ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்வையிட வந்த இருவர் திடீரென மக்களவைக்குள் குதித்து வண்ண பூச்சிகளை வெளிப்படுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா கையெழுத்திட்ட அனுமதிநுழைவு சீட்டோடு உள்ளே வந்திருந்தனர் என கூறப்பட்டது.
பிரதமரை சந்திக்க நேரம் கோரிய முதலமைச்சர் ஸ்டாலின்!
அதே நேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் அதே போல வேறு இருவர் வண்ணப்பூச்சிகளை வெளியிட்டு கோஷமிட்டனர். இதனால், நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது. இதன்பின், இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என ஈடுபட்டு வந்த நிலையில், சமீபத்தில் கனிமொழி உட்பட சுமார் 15 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 33 மக்களவை உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 33 மக்களவை உறுப்பினர்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மக்களவையில் டிஆர் பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சிஎன் அண்ணாதுரை மற்றும் செல்வம் உள்ளிட்ட 33 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்று காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன், திருநாவுக்கரசர், கே.ஜெயக்குமார், விஜய் வசந்த் மற்றும் அப்துல் காலிக் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கேட்டும் தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளே வர அனுமதிச்சீட்டு வழங்கிய பாஜக எம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…