புதிய சுகாதார துறை அமைச்சரின் முதல் பணி இது தான் – ப.சிதம்பரம்
தடுப்பூசிகளை எவ்வித இடையூறுமின்றி வழங்குவதை உறுதி செய்வதே புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முதல் பணியாக இருக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தடுப்பூசி இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு சேவை மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் தடைபட்டுள்ளது. மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை எவ்வித இடையூறுமின்றி வழங்குவதை உறுதி செய்வதே புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் முதல் பணியாக இருக்க வேண்டும்.
இன்னமும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான வேலையில் இறங்க வேண்டாம். மாநிலங்களுக்கு தடுப்பூசி உபயோகிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.’ என்று பதிவிட்டுள்ளார்.
No more games to enter the Guinness Book of Records please. Just focus on the supply of vaccines to all the States.
— P. Chidambaram (@PChidambaram_IN) July 8, 2021
/p>