இது எதிர்வரும் தேர்தல் குறித்த அச்சம்..! காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி..! – ப.சிதம்பரம்
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வேளாண் சட்டம் ரத்து குறித்து ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020, நவம்பர்- 25 ஆம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அவர்கள் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வேளாண் சட்டம் ரத்து குறித்து ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘மக்கள் போராட்டங்கள் பெற முடியாத வெற்றியை வரவுள்ள தேர்தல்களின் பயம் வென்றிருக்கிறது
மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்த பிரதமரின் அறிவிப்பு, கொள்கை மாற்றத்தினாலோ அல்லது மனமாற்றத்தினாலோ ஈர்க்கப்படவில்லை. இது தேர்தல் பயத்தால் தூண்டப்படுகிறது. எது எப்படியோ, விவசாயிகளுக்கும், விவசாயச் சட்டங்களுக்கு எதிராக அசையாத காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.’ என பதிவிட்டுள்ளார்.
Anyway, it is a great victory for the farmers and for the Congress party which was unwavering in its opposition to the farm laws
— P. Chidambaram (@PChidambaram_IN) November 19, 2021