இதுதான் மோடி அரசின் வளர்ச்சி….! ராகுல் காந்தி ட்வீட்…!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு நாள் அதிகரிக்காவிட்டால் அது ஒரு பெரிய செய்தியாக மாறும் என்பது தான் மோடி அரசின் வளர்ச்சி.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாத அரிய நாள் இன்று. விலைகள் தினமும் அதிகரிக்கப்படுகின்றன என்பதை இது காட்டுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரு நாள் அதிகரிக்காவிட்டால் அது ஒரு பெரிய செய்தியாக மாறும் என்பது தான் மோடி அரசின் வளர்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.
The rare day GOI does not hike fuel prices is the exception which proves the rule that prices are increased everyday. #FuelPriceHike
— Rahul Gandhi (@RahulGandhi) June 18, 2021