குஜராத்தில்100 சதவீத வாக்குளை பதிவு செய்த மையம் இதுவா !
நேற்று இந்தியா முழுவதும் 116 மக்களவை தொகுதிகளுக்கான 3 -வது கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது.
நேற்று குஜராத்தில் ஜுனாகட் நகரில் கிர் காடு பகுதியில் வாக்கு மையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த வாக்கு மையத்தில் வாக்களிக்க பரத்தாஸ் பாபு என்ற முதியவர் மட்டுமே உள்ளார்.
இந்நிலையில் நேற்று தனது வாக்கினை பதிவு செய்தார்.வாக்களித்த பின் அவர் கூறுகையில், என் ஒரு வாக்கிற்காக இந்த வாக்கு மையத்தை அரசு செலவு அமைத்து உள்ளது.அதனால் எனது வாக்கை நான் பதிவு செய்து விட்டேன்.
மேலும் நான் வாக்களித்ததால் இந்த மையத்தில் 100 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது. அது போல அனைத்து மையத்திலும் 100 சதவீத வாக்கு பெற வேண்டும் என்றால் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.