இது எங்கள் நிலம்..ஆட்டோகாரருக்கும் பயணிகளுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம்..! வைரலாகும் வீடியோ..!

Default Image

ஆட்டோ ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பல நாட்களாக பிராந்திய மொழிகள் மற்றும் ஹிந்தியை ஏற்றுக்கொள்வது பற்றிய விவாதம் நடந்து வருகிறது. அந்தவகையில் தற்பொழுது கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுனர், பயணிகளிடம் ஹிந்திக்கு பதிலாக கன்னடத்தில் பேசுவதற்காக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் தன்னுடைய ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணிகள் அவரிடம் ஹிந்தியில் பேசுமாறு கூறியிருக்கின்றனர். அதற்கு “இது கர்நாடகா, நீங்கள் கன்னடத்தில் பேச வேண்டும், நான் ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்” என்று ஆட்டோ டிரைவர் கூறினார். பின்னர் ஆட்டோ ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர் ஆட்டோவை நிறுத்தியதும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த பெண்மணி “நாங்கள் கன்னடத்தில் பேச மாட்டோம், நாங்கள் ஏன் கன்னடத்தில் பேச வேண்டும்” என்று கூறியபடி ஆட்டோவில் இருந்து இறங்கினார். அதற்கு பதிலளித்த ஆட்டோ ஓட்டுநர் “இது எங்கள் நிலம், உங்கள் நிலம் இல்லை. நீங்கள் கன்னடத்தில் பேச வேண்டும், நான் ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்” என்று கூறினார்.

இவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவை பதிவிட்ட நபர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பதிவில் குறியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்