இது அமலாக்கத்துறையின் செயல் அல்ல பாஜகவின் செயல்… சஞ்சய் ராவத் எம்பி!

Sanjay Raut

மகாராஷ்டிராவில் கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிச்சடி விநியோகம் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா (யுபிடி பிரிவு) எம்பி சஞ்சய் ராவத்தின், இளைய சகோதரர் சந்தீப் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கொரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ‘கிச்சடி’ வழங்குவதற்காக பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) ஒப்பந்தங்களை வழங்கியபோது முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி, சஹ்யாத்ரி ரெஃப்ரெஷ்மென்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் அந்தந்த இடங்களுக்கு ‘கிச்சடி’ தயாரித்தல், பேக்கேஜிங் மற்றும் விநியோகம் செய்ய ஃபோர்ஸ் ஒன் மல்டி சர்வீசஸுக்கு துணை ஒப்பந்தம் செய்தது. இதில், பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக குற்றசாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா (யுபிடி பிரிவு) முக்கிய நிர்வாகி சூரஜ் சவானின் தொடர்பு காரணமாக, அக்கட்சியில் இந்த பணமோசடி வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்கள், ஒப்பந்த நிறுவனத்தினர் உள்ளிட்டவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி, விசாரணை மேற்கொண்டு கைதும் செய்து வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் கிச்சடி ஊழல் வழக்கில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சி நிர்வாகி சூரஜ் சவானை அமலாக்கத்துறை கைது செய்தது.

1.17 நிமிடத்தில் முடிந்த ஆளுநர் உரை.! அதிருப்தியில் கேரள எம்.எல்.ஏ-க்கள்.!

இதற்கு உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சியினர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். சூரஜ் சவான் மீதான வழக்கில் ரூபாய் 6.37 கோடி மதிப்புள்ள முறைகேடுகள் நடந்ததாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் (EOW) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. கிச்சடி வழங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொண்ட பிஎம்சி துணை ஆணையரிடம் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தது.

இந்த சூழலில் எம்பி சஞ்சய் ராவத்தின் இளைய சகோதரர் சந்தீப் ராவத்துக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் ராவத் அடுத்த வாரம் மும்பையில் உள்ள மத்திய ஏஜென்சியின் அலுவலகத்தில் ஆஜராகி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிவசேனா (யுபிடி பிரிவு) எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது, இது அமலாக்கத்துறையின் நடவடிக்கை அல்ல, பாஜகவின் செயல்.

உண்மையான அமலாக்கத்துறை விசாரணை என்றால் 8000 கோடி ரூபாய் ஆம்புலன்ஸ் ஊழலில் ஏன் எந்த நோட்டீஸ் அனுப்பப்படவில்லை? கேள்வி எழுப்பிய அவர், முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளனர். கோடிகளை குவித்த கிரீட் சோமையாவுக்கு எந்த நோட்டீஸும் கொடுக்கவில்லை. இது முழுக்க முழுக்க பாஜகவின் நடவடிக்கை, அமலாக்கத்துறை என்ன செய்யும்? எத்தனை பேரை கைது செய்வீர்கள்? நீங்கள் விரும்புவதை செய்யுங்கள். இந்த நாட்களும் கடந்து போகும் என்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital
Gold Price today