இது இந்திய கலாச்சாரம் இல்லை! யானையை கொன்ற விவகாரம் குறித்து மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆதங்கம்!

Default Image

உணவில் வெடிவைத்து கொல்லும் வழக்கம் இந்திய கலாச்சாரத்தில் இல்லை.

கேரள மாநிலத்தில், கர்ப்பமான காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்ததால், அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். இதனையடுத்து, இது யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதனை உட்கொண்ட யானை, ஆறு ஒன்றில் நின்றபடி உயிரிழந்துள்ளது. மனிதாபிமானமற்ற முறையில், யானையை கொன்ற காட்டுமிராண்டிகளுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில்,  ட்விட்டரில் RIP HUMANITY என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.  

இந்நிலையில், இதுகுறித்து மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசு இவ்விவகாரததை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. முழுமையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். உணவில் வெடிவைத்து கொல்லும் வழக்கம் இந்திய கலாச்சாரத்தில் இல்லை.’ என தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்