முறைகேடு நடத்த இது கோவா அல்ல , மகாராஷ்டிரா- சரத் பவார்..!
மகாராஷ்டிராவில் பாஜக பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் முன் பதவி பதவியேற்றனர். பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது தொடர்பாக சிவசேனா , காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்க உள்ளது. பாஜக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றும் அனைத்தும் எம்எல்ஏக்களும் எங்களிடம் இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கூறி வருகிறது. இந்நிலையில் நேற்று சிவசேனா , காங்கிரஸ்மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணைந்து மும்பையில் ஒரு ஹோட்டலில் எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்தினர்.
அப்போது பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் “மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. மகாராஷ்டிரா மட்டுமின்றி கர்நாடகா , கோவா , மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி பிடித்திருக்கிறது.
சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது 162 எம்எல்ஏக்களை விட அதிகமாக ஆதரவு எங்களிடம் உள்ளது என்பதை நிரூபித்துக் காட்ட முடியும் .”முறைகேடுகள் நடந்த இது கோவா இல்லை மகாராஷ்டிரா” என தெரிவித்தார். மேலும் கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என மூன்று கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் ஒருசேர உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.