அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் நேரடியாக அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அதிபர் டெனால்ட் டிரம்ப் திறந்து வைக்க உள்ளார். இந்தியா வரவுள்ள டிரம்பிற்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. இது ஒரு பக்கம் இருக்க டிரம்ப்பின் தீவிர ரசிகர் ஒருவர் தான் டிரம்ப்பை சந்திக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஜங்கனோன் நகரத்தை சேர்ந்த புஷா கிருஷ்ணா என்பவர் டிரம்ப்பின் தீவிர ரசிகர், இவர் டிரம்ப்பிற்க்காக சுமார் 6 அடி உயரமுள்ள சிலை ஒன்று அமைத்து அதற்கு தினமும் பால் அபிஷேகம், பூஜை என பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றார்.
இதுகுறித்து தெரிவித்த அவர் ட்ரம்ப் எனக்கு கடவுள் போன்றவர் அவருக்கு சிலை அமைக்க ஒரு மாதம் ஆனது என்றும், டிரம்ப் நீண்ட காலம் வாழ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து வருகின்றேன். பின்னர் தினமும் வேலையை துவங்கும் முன் டிரம்ப் படத்திற்கு பூஜை செய்து அவரை வழிபட்டு தான் எனது வேலையை தொடங்குவேன் என தெரிவித்தார். மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நல்ல உறவு இருக்க வேண்டும் என்று பூஜை செய்து வருகிறேன். இந்தியாவுக்கு வரும் ட்ரம்பை நான் சந்திக்க வேண்டும் அதற்காக மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இவரை அனைவரும் ட்ரம்ப் கிருஷ்ணா என்று தான் அழைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…