இது நாட்டுக்கு கிடைத்த பெரிய சாதனை.! சந்திரயான்-3 குறித்து யுபிடி தலைவர் சஞ்சய் ராவத்.!
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலம், ஆகஸ்ட் 23 ஆம் தேதி (நாளை) நிலவில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், “இது நாட்டுக்கு கிடைத்த பெரிய சாதனை, இதை வரவேற்கிறோம்.” என சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
மேலும், “இது நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்பின் விளைவாகும், இதற்கு அவர்கள்தான் பெருமை சேர்க்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.