இது பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு, இதயத்தில் இருந்து அல்ல…! – பிரியங்கா காந்தி
மோடி அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு, இது பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு, இதயத்தில் இருந்து அல்ல.
நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விலை குறைப்புக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரியங்கா காந்தி அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘மோடி அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பு, இது பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு, இதயத்தில் இருந்து அல்ல. வரும் தேர்தலில் அரசின் கொள்ளைக்கு பதில் சொல்வதே மீட்பு.’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ये दिल से नहीं डर से निकला फैसला है।
वसूली सरकार की लूट को आने वाले चुनाव में जवाब देना है।#PetrolDieselPrice
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 4, 2021