தீவிரவாதம் என்ற பெயரில் பொதுமக்களை இந்த அரசு கொல்கிறது- மெகபூபா முப்தி..!

Default Image

தற்போதைய ஆட்சியில் தீவிரவாதம் என்ற பெயரில் பொதுமக்கள் கொள்ளப்படுகின்றனர் என மெகபூபா முப்தி கூறினார்.

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரின் ஹைட்ரபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. ஹைதர்போரா பகுதியில் நடந்த என்கவுன்டரில், பாகிஸ்தானிய பயங்கரவாதியான ஹைதர் மற்றும் அவனது உள்ளூர் கூட்டாளி முகமது அமிர் கொல்லப்பட்டனர்.

மேலும், அல்தாப் பட் மற்றும் முடாசிர் குல் ஆகிய இரு பொதுமக்களுடன் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின்  தலைவருமான மெகபூபா முப்தி பொதுமக்கள் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இறந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கக் கோரி இன்று  போராட்டம் நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) அமலுக்கு வந்ததில் இருந்து, இப்பகுதியில் அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு எந்த பொறுப்பும் இல்லை என்று கூறினார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரின் சர்ச்சைக்குரிய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

தற்போதைய ஆட்சியில் தீவிரவாதம் என்ற பெயரில் பொதுமக்களை கொன்றதால் தான் போராட்டம் நடத்துவதாக தலைவர் கூறினார். தீவிரவாதிகள் கொல்லப்படுகிறார்களா..? என்பது யாருக்கும் தெரியாது. அண்மையில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்களின் கோரிக்கையை மீறி இறந்தவர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அரசாங்கம் மறுக்கிறது என்று முஃப்தி கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்