இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு அடுத்த 10ஆண்டுகள் மிகவும் முக்கியமானது – பிரதமர் மோடி பேச்சு
கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது.இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை இரண்டாவது அமர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.அனைத்து கட்சிகளின் கருத்தும் வரவேற்கப்படுகிறது.இந்த கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமையும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு அடுத்த 10 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது.தற்போது நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 10 ஆண்டுகளுக்கானது. அடுத்த 10 ஆண்டுகள் இந்தியா செல்லவுள்ள ஒளிமயமான பாதைக்கு தங்கமயமான வாய்ப்பு தான் இந்த கூட்டத்தொடர் என்று கூறியுள்ளார்.