கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் முறையில் பல்வேறு மாற்றங்கள் விதித்து தேவஸ்தான தலைவர் நடவடிக்கை…
தற்போது வேகமாக பர்வி வரும் கொடிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரஸ் முற்றிலும் ஒழிக்க பக்தர்கள் சாமியை வேண்டிக் கொள்ள வேண்டும் என திருமலை- திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியுள்ளார். மேலும், அவர் ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்று தெரியவில்லை. மத்திய மாநில அரசுடன் அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போதைக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பக்தர்களை எப்போது அனுமதிப்பது என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் அளிக்கும் உத்தரவின்படி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், அவ்வாறு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று அறிவிப்பு வந்தாலும் கடந்த காலங்களை போன்று பக்தர்கள் கூட்டமாக தரிசனத்திற்கு அனுமதிக்க முடியாது என்றும்,கிருமிநாசினி பயன்படுத்துவது சமூக இடை வெளியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிப்பது போன்று தரிசன முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டியது உள்ளது என்றும், மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கிய பிறகு உரிய ஏற்பாடுகள் செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் எனறு தெரிவித்துள்ளார்.