9300 பக்தர்கள்.! ரூ.57 லட்சம் காணிக்கை.! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.!
நேற்று முன் தினம் மட்டுமே 9,301 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்ததால் 57 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளதாம்.
நாடுமுழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டே இருப்பதால், அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதே போல, கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் மாநிலங்களில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
ஆந்திராவில் வழிபாட்டு தளங்களை திறக்கலாம் என மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அம்மாநில அரசு அறிவித்த பின்னர், உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி கடைபிடிப்பது, முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று முன் தினம் மட்டும் (காலை 6 மணி முதல் இரவு 8.20 வரையில்) 9,301 பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்துள்ளனர். இதனால், 57 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைக்கப்பெற்றிருக்கிறதாம்.