ஜூன் மாதத்தில் ஹிந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிப்பு.
ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர் கூறுகையில், திருக்குறளை மொழிப்பெயர்க்கும் பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், வரும் ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என கூறினார்.
அதன்படி, ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஓடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படுகிறது. திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையையும் அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
மனிதனின் வாழ்வியியல் அங்கங்களான அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்து திருக்குறள் விளக்குகிறது. இதில் உள்ள கருத்துகள் இனம், மொழி, பாலின பேதங்களின்றி எக்காலத்துக்கும் பொருந்துவதால் திருக்குறள் ‘உலகப் பொது மறை’ என்றும் அழைக்கப்படுகிறது. திருக்குறளின் சிறப்பை அறிந்த அறிஞர்கள் 1800-ம் ஆண்டில் இருந்தே 43 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.
இருப்பினும் திருக்குறள், பல மொழிகளில் முழுமையாகச் சென்றடையவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், முதற்கட்டமாக அரசமைப்பின் 21 மொழிகளில் பஞ்சாபி, மணிப்புரி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி மொழிகளில் திருக்குறளை ஏற்கெனவே மொழிபெயர்த்திருந்த நிலையில், உலகின் அனைத்துமொழிகளிலும் மொழிபெயர்க்கத் திட்டமிட்டது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் ஹிந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…