ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் வெளியாகிறது திருக்குறள்.!

Default Image

ஜூன் மாதத்தில் ஹிந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவிப்பு.

ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர் கூறுகையில், திருக்குறளை மொழிப்பெயர்க்கும் பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், வரும் ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என கூறினார்.

அதன்படி, ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஓடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படுகிறது. திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையையும் அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

மனிதனின் வாழ்வியியல் அங்கங்களான அறம், பொருள், இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்து திருக்குறள் விளக்குகிறது. இதில் உள்ள கருத்துகள் இனம், மொழி, பாலின பேதங்களின்றி எக்காலத்துக்கும் பொருந்துவதால் திருக்குறள் ‘உலகப் பொது மறை’ என்றும் அழைக்கப்படுகிறது. திருக்குறளின் சிறப்பை அறிந்த அறிஞர்கள் 1800-ம் ஆண்டில் இருந்தே 43 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டன.

இருப்பினும் திருக்குறள், பல மொழிகளில் முழுமையாகச் சென்றடையவில்லை.  இதனைக் கருத்தில் கொண்டு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், முதற்கட்டமாக அரசமைப்பின் 21 மொழிகளில் பஞ்சாபி, மணிப்புரி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி மொழிகளில் திருக்குறளை ஏற்கெனவே மொழிபெயர்த்திருந்த நிலையில், உலகின் அனைத்துமொழிகளிலும் மொழிபெயர்க்கத் திட்டமிட்டது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் ஹிந்தி உட்பட 12 மொழிகளில் திருக்குறள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்