ஏடிஎம் மெஷினை கயிறு கட்டி இழுத்த திருடர்கள்! அதிரவைக்கும் வீடியோ பதிவு!

ATM Robbery

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் என்னும் மாவட்டத்தில் உள்ள தரூர் என்னும் இடத்தில் உள்ள ஒரு எஸ்பிஐ (SBI) வங்கி ஏடிஎம் மெஷினை திருடர்கள் கயிறு கட்டி இழுத்து திருடி உள்ளனர்.

இந்த அதிரவைக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. கடந்த சனிக்கிழமை இரவு பொழுது இந்த சம்பவமானது அரங்கேறி இருக்கிறது. மேலும், கொள்ளையடிக்கப்பட்ட அந்த ஏடிஎம் மெஷினையும் ரூ.21 லட்சம் பணத்தையும் போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.

அந்த வீடியோவில், ‘ரெயின் கோட் அணிந்து கொண்டு முகத்தில் முகக்கவசம் அணிந்து கொண்டு  2 திருடர்கள் கயிறை எடுத்து அந்த அறைக்குள் இருக்கும் ஏடிஎம் மெஷினில் சுற்றி கட்டி வைக்கின்றனர். அதன் இன்னோரு முனையை வெளியில் நிறுத்தி உள்ள காரில் ஏற்கனவே கட்டி வைத்திருக்கின்றனர்.

பின் வெளியில் உள்ள இருவர் காரை நகர்த்தி அந்த ஏடிஎம் மெஷினை தனியாக வந்துவிடும். பின் அதை தூக்கி கொண்டு அந்த திருடர்கள் தப்பித்து செல்வார்கள். இந்த திருட்டை, உடனடியாக வங்கி ஊழியர் அதிகாரிகளிடம் எச்சரித்துள்ளார்.

அதன் பின் உடனடியாக அந்த திருடர்களை சுமார் 4 மணி நேரம் 61 கிலோமீட்டர் வரை துரத்தி சென்றுள்ளனர். ஆனால், அதிகாரிகளால் அந்த ஏடிஎம் மெஷினையும்  அதிலிருந்த 21 லட்சம் பணத்தையும் மட்டுமே கைப்பற்ற முடிந்தது. ஆனால், துரதிஷ்டவசமாக அந்த திருடர்கள் தப்பித்தது சென்றுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்தது தரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருவதுடன், இது தொடர்பாக ஈடுபட்ட அந்த 4 திருடர்களை பற்றி யாருக்காவது, ஏதேனும் தெரிந்தால் தகவல் அளிக்கவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்