சிறைச்சாலை ஹோட்டலில் ரூ.2 லட்சத்தை திருடிய திருடர்கள்…! திருடர்களை பிடிக்க போலிஸார் வலைவீச்சு…!

கேரளாவில் கண்ணூரில் உள்ள சிறைச்சாலையில் freedom food factory என்ற ஹோட்டலில் வியாழக்கிழமை காலை கடையில் இருந்து ரூ.2 லட்சம் திருடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கண்ணூரில் உள்ள சிறைச்சாலையில் freedom food factory என்ற ஹோட்டலில் வியாழக்கிழமை காலை கடையில் இருந்து ரூ.2 லட்சம் திருடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ரூ 1.92 லட்சம் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை காலை அதிகாலையில் இந்த திருட்டு நடந்ததாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு முதல், freedom food factory சிறைக்கைதிகளின் பங்களிப்புடன் கேரள சிறை துறையால் நடத்தப்படும் ஒரு உணவகம் ஆகும். இதில் வெளியில் விற்க்கப்படும் லட்டுகள் மட்டும் சப்பாத்தி போன்ற உணவுகளை தயாரிக்கின்றனர்.
கொள்ளையர்கள் காம்பவுண்ட் சுவரில் குதித்து வளாகத்துக்குள் நுழைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை காட்டினாலும் அதில் காட்சிகள் தெளிவாக இல்லை என கூறப்படுகிறத. இதனையடுத்து கண்ணூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025