பஞ்சாபில் ஆட்டோக்குள் அமர்ந்திருந்த பெண்ணிடமிருந்து போனை திருடர்கள் பறிக்க முயன்ற போது அதை மீண்டும் பிடுங்க நினைத்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
தற்போதைய காலத்தில் தெருவில் பெண்கள் அல்ல ஆண்களே நடந்து செல்வதற்கு சற்று அச்சமாக இருக்கிறது. காரணம் என்னவென்றால் வழிப்பறி கொள்ளை தான். தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருக்க கூடிய பொருட்கள், கைப்பை அல்லது அணிந்திருக்கக் கூடிய தங்க நகைகள் ஆகியவற்றை திருடிவிட்டு செல்லும் கொள்ளையர்கள் பல்வேறு இடங்களிலும் அதிகரித்துவிட்டனர். இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தற்போதும் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
27 வயது இளம்பெண் ஒருவர் ஆட்டோ ரிக்ஷாவில் அமர்ந்து தனது மொபைலை உபயோகித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த திருடர்கள் அப்பெண்ணின் கையில் இருந்த போனை திருட முயற்சித்துள்ளனர். அப்போது நின்று கொண்டிருந்த ஆட்டோ நகர்ந்ததால் அப்பெண் மொபைலை மீண்டும் பிடுங்க நினைத்த பொழுது ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். போனை திருட முயற்சித்தவர்கள் அப்பெண்ணை தாக்கிய போதும் போராடி அந்த போனை எடுத்து விட வேண்டும் என அப்பெண் கடினமாக இழுத்ததால் ஆட்டோவில் இருந்து வெளியே விழுந்து விட்டார் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தான் பெண் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…