இவர்களுக்கு ராணுவத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சர்

Published by
பாலா கலியமூர்த்தி

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு துணை ராணுவப் படையில் முன்னுரிமை.

முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நேற்று அறிமுகம் செய்தார். மத்திய அரசு, இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது. அக்னபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 45 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர். இதற்கு வயது வரம்பு 17 – 21 வயது வரை இருக்கும். 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இவர்களுக்கு மெடிக்கல் மற்றும் இன்சூரன்ஸ் சேவைகளும் வழங்கப்படும். 4 ஆண்டுகள் கழித்து இந்த வீரர்களில் 25% பேர் வரை ராணுவத்தில் நிரந்தரமாக 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளனர்.

Agnipath

இதில் நிரந்தர பணிக்கு தேர்வாகாத மீதம் உள்ள 75% வீரர்கள் பென்ஷன் இல்லாமல் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு துணை ராணுவப் படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மேலும், ராணுவத்தில்  அக்னிபத் என்ற திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள் 4 ஆண்டு பணிக்கு பின் அசாம் ரைபிள்ஸ் பிரிவில் சேர்க்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார். மத்திய ஆயுத போலீஸ் படை வீரர்கள், அசாம் ரைபிள்ஸ் படை பிரிவில் சேர்க்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

47 minutes ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

1 hour ago

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!

பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…

2 hours ago

LIVE: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்குகளில் கட்டண உயர்வு வரை.!

சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

3 hours ago

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

3 hours ago

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் அஜித் பேமிலி.! வைரல் போட்டோஸ்…

ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…

4 hours ago