காங்கிரஸை விட்டு வெளியேற பாஜக எனக்கு பணம் கொடுப்பதாக கூறினர் என பாஜக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் கூறினார்.
எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல் 2019 இல் பாஜகவில் சேர்ந்தார். 2019 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்த 16 எம்எல்ஏக்களில் பாட்டீலும் ஒருவர். இதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கூட்டணி அரசு கவிழ்ந்தது. பாட்டீல் 2018 ஆம் ஆண்டு கக்வாட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருந்த ஸ்ரீமந்த் பட்டீல், பெலகாவி காகவாட் சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எடியூரப்பா தலைமையில் அமைந்த அமைச்சரவையில் ஸ்ரீமந்த் பாட்டீல் ஜவுளி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். எடியூரப்பா பதவி விலகியதும், பசவராஜ் பொம்மை முதல்வரானதும் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், பெலகாவி மாவட்டம் கக்வாட் தாலுகாவில் உள்ள ஐனாபூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாட்டீல், காங்கிரஸை விட்டு வெளியேற பாஜக எனக்கு பணம் கொடுப்பதாக கூறினர்.
நான் ஒரு பைசா கூட வாங்காமல் பாஜகவுக்கு வந்தேன். எனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் பணத்தை வாங்க மறுத்து, புதிய அரசு அமைந்த பிறகு ஒரு நல்ல பதவியை கொடுக்கச் சொன்னேன். நான் எந்தப் பணமும் வாங்காமல் பாஜகவில் சேர்ந்தேன் என கூறினார்.
வேளாண்துறை:
கடந்த 20 வருடங்களாக நான் விவசாயம் செய்து வருகிறேன். நானும் ஒரு விவசாய பட்டதாரி. எனக்கு கொடுக்கப்பட்ட ஜவுளி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை நேர்மையாக கையாண்டேன். அடுத்த அமைச்சரவை விரிவாக்கத்தில் நான் சேர்க்கப்படுவேன் என்று முதல்வர் பசவராஜா பொம்மை உறுதியளித்துள்ளார். எனக்கு வேளாண் துறை வழங்கப்பட்டால், நான் அதை நன்றாக கையாண்டு மக்களுக்கு உதவுவேன் என கூறினார்.
பிஜேபி தங்கள் எம்எல்ஏக்களை பணம் மற்றும் பதவி மோகத்திற்கு ஈர்த்ததாக குற்றம் சாட்டிய போது பாஜக அதை மறுத்தது. நாளை தொடங்கும் சட்டசபை கூட்டத்தின் போது காங்கிரஸ் இந்த பிரச்சினையை எழுப்ப வாய்ப்புள்ளது.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…