அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை ஏனெனில் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இவர்களிடம் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில், குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா ட்விட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் போராட்டம் நடக்கும் பகுதியை சுற்றி இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது குறித்து, ‘இது குறித்து நாம் ஏன் பேசவில்லை’ என டுவிட் செய்திருந்தார்.
இதனையடுத்து இவருக்கு பதில் தெரிவிக்கும் வண்ணமாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கத்தில், ‘அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை ஏனெனில் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள். அமெரிக்காவைப் போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே உங்களைப் போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்.’ என ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…