ஊழலை மறைக்க மொழியின் பெயரால் அரசியல் செய்றாங்க! அமித் ஷா பேச்சு!
மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது என மத்திய அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா ” மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது என விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” தமிழகத்தில் பாஜக மட்டும் ஆட்சிக்கு வந்தது என்றால் தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை நிச்சயமாக உறுதி செய்வோம்.
தற்போது எங்களுடைய ஆட்சியில் நாடு மிகவும் முன்னேறியுள்ளது. முன்னேற்றத்தை பற்றி நாடே பெருமையாக பேசுகிறது. அதைப்போல எங்கெல்லாம் ஊழல்கள் நடைபெறுகிறதோ அதனையெல்லாம் நாங்கள் அம்பலப்படுத்தி வருகிறறோம். அப்படி இருந்தும் உழலலை மறைப்பதற்கு சிலர் மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இந்திய மொழி என்பது ஒரு நண்பன் போன்றது. அது பிற இந்திய மொழிகளை வலிமையாக்குகிறது.
இதனை கூட புரிந்து கொள்ளாமல் மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடுகிறது. மொழியின் பெயரால் திமுக நாடு முழுவதும் விஷத்தை பரப்புகிறது. வெகுதொலைவில் உள்ள அந்நிய மொழியை விரும்புகிறீர்கள் ஆனால், இந்திய மொழியை எதிர்க்கிறீர்கள் அது ஏன் என்று புரியவில்லை. நான் டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் அவர்களின் தாய்மொழிகளில் மட்டுமே கடிதங்களைப் பரிமாறிக் கொள்வேன்” எனவும் அமித்ஷா தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே டாஸ்மாக் விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், அந்த ஊழல் விவகாரத்தை மறைக்க மொழிப் பிரச்சினையை எழுப்புகிறார்கள் என்று திமுகவையே அமித்ஷா மறைமுகமாக சாடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.