தடுப்பூசிகளுக்கு அனுமதி ! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வாழ்த்து
அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அயராத முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.இதற்கு பிரதமர் மோடி உட்பட அனைவரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தனது ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்துள்ளார்.அவர் பதிவிட்டுள்ள பதிவில்,பிரதமரின் தலைசிறந்த தலைமையின் கீழ் கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் புகழ்பெற்ற போரில் சிறப்பான தருணம் இதுவாகும். இந்த தடுப்பூசிகள் நமது கொரோனா முன்கள வீரர்களுக்கு பொருத்தமான பரிசு ஆகும்.தடுப்பூசி இல்லாத காலங்களில் பணியாற்றிய அனைத்து சுகாதார வல்லுநர்களுக்கும் முன்னணி ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் அயராத முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.தடுப்பூசியை விரைவாகவும், சமமாகவும் விநியோகிப்பதற்காக நாங்கள் வைத்துள்ள வலுவான விநியோக உள்கட்டமைப்பின் பலன்களைப் பெறுவதற்கான நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.
These vaccines are a fitting tribute to our corona warriors!
My heartfelt gratitude to all healthcare professionals & frontline workers for their exemplary efforts during these unprecedented times.
Congratulations to all the scientists & researchers for their untiring efforts.
— Dr Harsh Vardhan (@drharshvardhan) January 3, 2021