இனிமேல் இந்தியாவில் இந்த ஹெல்மெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய முடியும்! மத்திய அரசு அதிரடி!
இந்திய தரம் நிர்ணய செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட (BSI) இரு சக்கர வாகன ஹெல்மெட்டுகள் மட்டுமே, இனிமேல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும் என மத்திய அரசு உத்தரவு.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தலைகவசம் அணியாத பட்சத்தில், போக்குவரத்து காவல்துறையினர் அபாரதம் விதிகின்றனர். இந்நிலையில், தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதற்காக, தரம்குறைந்த தலைக்காவசங்களையும் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், இந்திய தரம் நிர்ணய செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட (BSI) இரு சக்கர வாகன ஹெல்மெட்டுகள் மட்டுமே, இனிமேல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுவரை விற்பனை செய்யப்பட்ட மலிவான விலை மற்றும் BSI சான்றிதழ் இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு, 2021 ஜூன், 1 முதல் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.