இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் – கூலி தொழிலாளியின் மகனின் குறுஞ்செய்தியை பகிர்ந்த மருத்துவர்!
கொரோனா நோயாளிக்கு தனது சம்பளத்தை கொடுக்குமாறு காய்கறி வியாபாரியின் மகன் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியை மருத்துவர் ஸ்னேஹில் மிஸ்ரா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு பணம் படைத்தவர்களே கொரோனா நோயாளிகளுக்கு உதவ முன்வராத நிலையில் சில கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் கூட கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் நிலை குறித்து யோசித்து உதவ முன்வருகிறார்கள்.
அதுபோல மும்பையில் உள்ள காய்கறி விற்பனையாளர் ஒருவரின் மகன் கொரோனா நோயாளிகளுக்கு உதவ தனது சம்பளத்தை நன்கொடையாக மருத்துவர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். மருத்துவர் ஸ்னேஹில் மிஸ்ராவிடம் தனது சம்பளத்தை நோயாளிகளுக்கு வழங்குமாறு அந்த காய்கறி விற்பனையாளரின் மகன் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார் இந்த குறுஞ்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மருத்துவர், இவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் எனவும், அவனது செயலை கண்டு தனக்கு பேச வார்த்தைகளே கிடைக்கவில்லை எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Thank you for all the love! I shall definitely convey your regards to the person who deserves all this! Hope we continue to do our bit to inspire, help and heal! God bless! https://t.co/wvZ3ZycmQi
— Dr Snehil Mishra (@drsnehilmishra) April 18, 2021