சீனாவில் கொரோனா அதிகரிப்புக்கு இந்த 4 வகைகள் தான் காரணம் – இந்தியா
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கு 4 வகைகள் தான் காரணம் என்று இந்தியாவின் கொரோனா குழு தலைவர் தகவல்.
சமீப நாட்களாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு நான்கு வகைகள் காரணமாகின்றன என்று மத்திய அரசின் கொரோனா குழுவின் தலைவரான என்கே அரோரா கூறியுள்ளார்.
அதாவது, ஓமிக்ரான் மாறுபாட்டின் BF.7 திரிபு 15% பாதிப்புகளுக்கு காரணம் என்றும் பெரும்பாலான பாதிப்புகள் (50%) BN மற்றும் BQ தொடரிலிருந்து வந்தவை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், 10-15% பாதிப்புகள் XBB மாறுபாட்டிலிருந்து வந்தவை எனவும் கொரோனா குழுவின் தலைவரான என்கே அரோரா கூறியுள்ளார்.