கட்டுப்பாட்டு மண்டலங்களில் இந்த 11 மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்..,ஹர்ஷ்வர்தன்

Default Image

கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுதலை குறைக்க கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூக தனிமைப்படுத்த பெரிய கட்டுப்பாட்டு மண்டலங்களை உருவாக்க வேண்டும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். மேலும், இந்த 11 மாநிலங்களில் அதிகம் கொரோனா எதிர்கொள்ளும் முக்கிய ஐந்து மாநிலங்கள் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் தற்போது புதியாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 7.6 சதவீத எனவும் இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான 5.5 % விட 1.3 மடங்கு அதிகம் என கூறப்பட்டது. அதே நேரத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 10.2 % அதிகரித்துள்ளது.

மும்பை, நாக்பூர், புனே, நாசிக், தானே, லக்னோ, ராய்ப்பூர், அகமதாபாத் மற்றும் அவுரங்காபாத் போன்ற மாநிலங்கள் தினசரி பாதிக்கும் வரம்பை ஏற்கனவே கடந்துவிட்டன என வர்தன் கூறினார். வென்டிலேட்டர்கள் மற்றும்  ஆக்ஸிஜன் பற்றாக்குறை என கூறும் மத்தியில் மகாராஷ்டிராவுக்கு 1,121 வென்டிலேட்டர்கள், 1,700 உ.பி., 1,500 ஜார்கண்டிற்கு, 1,600 குஜராத்துக்கு, 152 மத்திய பிரதேசம் மற்றும் 230 சத்தீஸ்கருக்கு வழங்கப்படும்.தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இருக்காது என்றும் அவர் கூறினார்.

இதுவரை தடுப்பூசிகளின் மொத்த நுகர்வு, வீணானது உள்ளிட்டவை, மையம் வழங்கிய 14.15 கோடி அளவுகளுக்கு எதிராக சுமார் 12.57 கோடியாக உள்ளது.  இதுவரை மாநிலங்களுக்கு 14.15 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப் பட்டுள்ளன. இதில் 12.57 கோடி தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. சுமார் 1.58 கோடி டோஸ் இன்னும் மாநிலங்களில் உள்ளன. மேலும் 1. 16 லட்சம் டோஸ் அடுத்த வாரத்திற்குள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்