வாழ்க்கையில் போட்டி இருக்க வேண்டும்.. ஆனா ஆரோக்கியமானதாக.. – பிரதமர் மோடி

pm modi

தங்கள் குழந்தைகளை மற்றொரு குழந்தைகளுடன் ஒருபோதும் ஒப்பிடக்கூடாது என்று பெற்றோர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். தேர்வு நேரத்தில் ஏற்படும் பயம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது குறித்து டெல்லியில் பிரதமர் மோடி, மாணவர்களுடன் (Pariksha Pe Charcha 2024) கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடி பேசியாவது, பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மற்றொரு குழந்தைகளின் உதாரணங்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

இவ்வாறு செய்வதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கும். அதனை சமாளிக்க நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டையே விசிட்டிங் கார்டாக பெற்றோர்கள் கருதுகிறார்கள். வாழ்க்கையில் சவால்கள் இல்லை என்றால், வாழ்க்கை உற்சாகமற்றதாகவும், மனச்சோர்வடையாததாகவும் மாறும். போட்டி மற்றும் சவால்கள் வாழ்க்கையில் உத்வேகமாக செயல்படுகின்றன. வாழ்க்கையில் போட்டிகள் இருக்க வேண்டும். ஆனால் போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் மற்றவர்களோடு போட்டி போடாமல் தங்களோடு தாங்களே போட்டி போட வேண்டும். ஒருவரின் திறன்களைப் பாதிக்கும் அளவுக்கு அழுத்தம் இருக்கக்கூடாது. மாறாக எந்தவொரு செயல்முறையிலும் படிப்படியான வளர்ச்சி இருக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் வேலையை வெறும் வேலையாக எடுத்துக்கொள்ளாமல், மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்.

பிப்.1 இடைக்கால பட்ஜெட்! நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு!

ஒரு ஆசிரியரின் பணி ஒரு வேலையைச் செய்வது மட்டுமல்ல, வாழ்க்கையை மேம்படுத்துவதும். மாணவர்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து ஆசிரியர்களிடம் வெளிப்படையாக விவாதிக்கும் வகையில் உறவு முறை இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை பிரச்னைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மாணவர்கள் எழுச்சி பெறுவார்கள். அதாவது, மாணவர்களுடன் சரியான மற்றும் இதயப்பூர்வமான உரையாடல் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதை உறுதி செய்ய முடியும்.

குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே எப்போதும் நல்லுறவு இருக்க வேண்டும். பிறர் கூறும் குறைகளை வைத்து, தன் குழந்தைகள் குறித்து தவறாக நினைக்காதீர்கள். அது அவர்களின் மன நலனைப் பாதிக்கிறது. இது மாணவர்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் குறைத்து விடும். எனவே, மாணவர்களுடன் சரியான உரையாடல் மூலம், அவர்களின் பதற்றம், மன அழுத்தம், பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பின்மைக்கு நல்ல தீர்வாக அமையும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்