பல்பு வாங்கிய பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்… பொய்களை கூறுவது வாடிக்கை என்று இந்தியா காட்டம்…
பங்காளி நாடான பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு நடத்த இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக, பாகிஸ்தான் கூறியுள்ளதில் எந்த உண்மையும் இல்லை’ என, இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், காஷ்மீர் உட்பட, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ‘அமைதி பேச்சு நடத்த ஆர்வமாக இருப்பதாக இந்தியா செய்தி அனுப்பியுள்ளது’ என, குறிப்பிட்டார்.
இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா கூறியதாவது, பாகிஸ்தான் அதிகாரி கூறியுள்ளதுபோல், அமைதி பேச்சு நடந்த, இந்தியா எந்த அழைப்பும் விடுக்க வில்லை; அவர் கூறியதில் எந்த உண்மையும் இல்லை. நம் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக அவர் பேசியுள்ளதற்கு, இந்தியா சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பாகிஸ்தானில் உள்ள அரசு, உள்நாட்டு பிரச்னைகளால் திண்டாடுகிறது. அதை மறைக்கவும், சர்வதேச நாடுகளை திசை திருப்பவும், இதுபோன்ற பொய்களை கூறுவது வாடிக்கை என்று அவர் கூறினார்.