#Breaking : யாருக்கும் ஆதரவு இல்லை.. மம்தா பேனர்ஜி அதிரடி அறிவிப்பு.!
துணை குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் , மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் நாட்டின் புதிய குடியரசு தலைவர் யார் என தெரிந்துவிடும். திரௌபதி முர்மு தான் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என வரும் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , ‘துணை முதல்வர் தேர்தலில் ஆளுங்கட்சி எதிர்கட்சி என யாருக்கும் ஆதரவு இல்லை.’ என அறிவித்து விட்டார்.
‘துணை முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் யாரும் எங்களை கலந்தாலோசிக்கவில்லை. ஆதலால், எங்கள் கட்சியில் இருந்து யாரும் துணை முதல்வர் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள்.’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.