டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை.!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டெல்லியில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பது குறித்து உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க டெல்லியில் மருத்துவ ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, சுகாதார அமைச்சர் டெல்லியில் சுமார் 1,000 ஐ.சி.யூ படுக்கைகள் இருப்பதாகவும், டெல்லி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டகொரோனா நோயாளிகளில் 30 சதவீதம் பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்.
டெல்லியில் இப்போது பிளாஸ்மா கிடைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. பெரும்பாலும் டெல்லிக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கு தற்போது ஐ.சி.யூ படுக்கைகள் தேவை. மேலும், டெல்லி முழுவதும் ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் பிற படுக்கைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 3,816 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,53,075 ஆக உயர்ந்துள்ளது.