கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளும் திட்டம் ஏதுமில்லை என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆதரவுடன் வரும் புதன்கிழமை கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்க உள்ளார். கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஸ்வரா துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடக அமைச்சரவையில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு 20 அமைச்சர் பதவிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 18 அமைச்சர் பதவிகளும் ஒதுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு பாஜகவுடன் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை பரிமாறிக் கொள்ளும் நிபந்தனையுடன் குமாரசாமி முதலமைச்சர் பதவி வகித்தார்.
ஆனால், குமாரசாமி அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் கூறிய பாஜக, 20 மாதங்களில் ஆதரவை வாபஸ் பெற்றதால், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. இருப்பினும், தற்போது நிபந்தனையற்ற ஆதரவு தந்துள்ள காங்கிரஸ் கட்சியுடன் முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள குமாரசாமி திட்டமிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த குமாரசாமி, முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் காங்கிரஸ் கட்சியுடன் பகிர்ந்து கொள்ளும் திட்டம் ஏதுமில்லை என விளக்கம் அளித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் 5 ஆண்டுகள் முழுமையாக முதலமைச்சர் பதவியில் நீடிக்கவுள்ளதாகவும் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திப்பதற்காக நாளை காலை டெல்லி செல்லவுள்ளதாக அவர் கூறினார். புதன்கிழமை பதவியேற்றதும், வியாழக்கிழமையே பெரும்பான்மையை நிரூபிக்கப்போவதாகவும் குமாரசாமி தெரிவித்தார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…