முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டம் இல்லை – டெல்லி துணை முதல்வர்!
டெல்லியில் உள்ள தியாகராஜ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், அது நீண்ட காலங்களுக்கும் நிலைக்கக்கூடியது. கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்பொழுது குறைவாக இருப்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை.
மேலும், தற்பொழுது டெல்லியில் கொரோனா பரவல் குறைவாக தான் உள்ளது. எனவே, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில மாநிலங்களில் முகக்கவசம் அணிவதே அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் முகக்கவசம் அணிந்து கொள்வது அவரவர் விருப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.