மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் இல்லை-சுப்பிரமணியன் சுவாமி …??
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள சென்னை ஐ.ஐ.டியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் இல்லை.அதற்காக எந்தவொரு பிரச்சனையும் இல்லை என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”மத்திய அரசு கட்டுப்பாட்டில்,அதன் நிதியின் மூலம் உருவாகியுள்ள சென்னை ஐ.ஐ.டியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உருவாக்கப்பட்டது தான் ஐ.ஐ.டி.க்கள் ஆகும். மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபு இல்லை. அதேபோல தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் தேசிய கீதம் பாடுவதும் அவர்களது மரபு இல்லை. தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். அதனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.