மத்திய பிரதேசத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை…!

Default Image

மத்திய பிரதேசத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை.

நேற்று காலை முதல்  230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 

Image result for modi rahul mp election


இந்நிலையில் 22 மணி நேர வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. வாக்கு எண்ணிக்கையின்   இறுதியில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் 
பாஜக 109 இடங்களிலும்,பகுஜன் சமாஜ் கட்சி இரு தொகுதிகளை வென்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியில் வென்றுள்ளது. 4 தொகுதிகளை சுயேச்சைகள் கைப்பற்றி உள்ளனர்.

அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு குறைந்தபட்சம் 116 எம்எல்ஏக்கள் பலம் தேவை. எனவே மத்திய பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை எழுந்துள்ளது.


ம.பி.யில் பேரவை தேர்தல் முடிவில் பின்னடைவை சந்தித்தாலும் வாக்குகளில் முன்னிலை பெற்றது பாஜக .ஒட்டு மொத்தமாக பாஜக 41% (1,56,42,980) வாக்கு, காங்கிரஸ் 40.9% (1,55,95,153) வாக்கு பெற்றது.ம.பி.யில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 47,827 ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்