தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடையாது – கேரளா முதல்வர்
கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை கிடையாது என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை கிடையாது என்றும், அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இலவச சிகிச்சையும் வழங்கப்படாது என்றும் தெரிவித்தார்.
மேலும் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மக்களுடன் தொடர்பு இருப்போர் வாரந்தோறும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளை வழங்க வேண்டும் என்றும், இந்த பரிசோதனைகளுக்கு அவர்களை கட்டணத்தை செலுத்தி அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.