புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது.
மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர்.
இதனிடையே புதிய கல்விக்கொள்கை மூலம் உயர்கல்வியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக தற்போது உரையாற்றி வருகிறார்.
புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி உரை
அதில் அவர் கூறுகையில், 3-4 ஆண்டுகளில் விரிவான கலந்துரையாடல்கள் மற்றும் லட்சக்கணக்கான பரிந்துரைகள் குறித்து விவாதித்த பின்னர் தேசிய கல்வி கொள்கை அங்கீகரிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
மேலும் புதிய கல்வி கொள்கை முக்கிய மாற்றமாக உள்ளது. புதிய கல்வி கொள்கையில் எந்தவித பாகுபாடும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…